துர்கா சிலை ஊர்வலம் வெடித்த மோதல் - உத்தரப்பிரதேசத்தில் உச்சகட்ட பரபரப்பு

x

உத்தரப்பிரதேசம் பரைச் பகுதியில் நேற்று துர்கா சிலை கரைப்பு நிகழ்வை ஒட்டி ஊர்வலம் நடைபெற்றது. மஹாராஜ்கஞ்ச் பஜார் அருகே துர்கா சிலை ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது அதிகமான ஒலியுடன் பாடல் இசைக்கப்பட்டதால், அப்பகுதியில் இருந்த இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டு, கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. மோதலின் ஒரு பகுதியாக ஊர்வலத்தில் சென்ற 22 வயதான ராம்கோபால் மிஷ்ரா என்ற இளைஞர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். கல்வீச்சு சம்பவத்தில் ஊர்வலத்தில் பங்கேற்ற பலரும் காயம் அடைந்தனர்.

இளைஞர் கொல்லப்பட்டதை அறிந்த உள்ளூர் மக்கள் பல்வேறு இடங்களில் வாகனங்களை தீ வைத்து எரித்தனர். இளைஞர் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் சிலர் கடைகளுக்கு மருத்துவமனைக்கு தீ வைத்தனர். இந்நிலையில், அமைதியை சீர்குலைக்க விரும்பும் எவரும் தப்ப முடியாது என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்