மகனின் நண்பனை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்ட தொழிலதிபர் - திருமண விருந்தில் பயங்கரம்..

x

பரேலியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், இரண்டு நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஒரு இளைஞரின் தந்தை போதையில், மற்றொரு இளைஞரை சரமாரியாகத் தாக்கியதுடன் அவரை மாடியில் இருந்து கீழே தள்ளினார். பலத்த காயமடைந்த அந்த இளைஞர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது மகன் மன்னிப்பு கேட்ட பிறகும் கீழே தள்ளி விட்டார்கள் என்று பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை குற்றம்சாட்டினார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்