விசித்திரமான புகார் கொடுத்த நபர்.. கேட்டதும் சிரித்த போலீஸ்
விசித்திரமான புகார் கொடுத்த நபர்.. கேட்டதும் சிரித்த போலீஸ்
சமைக்க வைத்திருந்த கால் கிலோ உருளைக்கிழங்கைக் காணவில்லை என போதை ஆசாமி போலீசில் புகார் அளித்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மன்னபூர்வா பகுதியைச் சேர்ந்தவர் விஜய் வெர்மா.... கூலித்தொழிலாளியான இவர் தொலைபேசியில் காவல் உதவி எண்ணுக்கு அழைத்து தனது வீட்டில் திருடுபோய்விட்டதாக புகார் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, விஜய் வெர்மா மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. என்ன பொருள் திருடுபோனது என போலீசார் அவரிடம் கேட்க, சமைப்பதற்காக வைத்திருந்த கால் கிலோ உருளைக்கிழங்கைக் காணவில்லை என மதுபோதையில் அவர் கூறியுள்ளார். இதனைக் கேட்டு போலீசார் சிரித்த நிலையில், உருளைக்கிழங்கை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று அந்த போதை ஆசாமி அப்பாவியாய்க் கூற, இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.