வீட்டிற்குள் நுழைந்ததும் ஹார்ட் அட்டாக்.. 15 நிமிடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்த உயிர்..
மோசடி கும்பலால் அரசுப்பள்ளி ஆசிரியை மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த மால்தி வர்மாவுக்கு வாட்ஸ் அப்பில் மர்ம அழைப்பு ஒன்று வந்துள்ளது. கல்லூரி செல்லும் அவரது மகள் பாலியல் மோசடியில் சிக்கியதாக கூறிய மர்ம ஆசாமி, மகள் பத்திரமாக வீடு வந்து சேரவும், வழக்கு பதியாமல் இருக்கவும் 1 லட்சம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். அச்சம் அடைந்த மால்தி வர்மா தன் மகனுக்கு தகவல் தரவே, அவரது மகன் இது மோசடி என்பதைக் கண்டறிந்தார். இருந்தபோதும் இந்த விவகாரத்தை நினைத்து வருந்திக் கொண்டிருந்த மால்தி வர்மா பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் உடல்நிலை மிகவும் மோசமானது. வீடு திரும்பிய 15 நிமிடங்களில் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சைபர் கிரைம் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.