மதரஸா இடிப்பு.. வெடித்த வன்முறை.. போலீஸ் வாகனத்திற்கு தீ.. 4 பேர் உயிரிழந்த சோகம்.. உத்தரகாண்ட்டில் பெரும் பரபரப்பு
உத்தரக்காண்ட் மாநிலம் ஹல்த்வானி அருகே வன்முறை வெடித்ததை தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பான்புல்புரா பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வந்த மதரஸாவை, எதிர்ப்பையும் மீறி நகராட்சி அதிகாரிகள் இடித்தனர். இதனால், கோபமடைந்த அப்பகுதி மக்கள், அதிகாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு, போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த வன்முறை சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதன் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையாளர்களை கண்டதும் சுட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பான்புல்புரா பகுதி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.