உ.பி. ஆசிரியை செய்த பகீர் செயல்
உத்தரபிரதேசத்தில், சக மாணவரை கொண்டு மற்றொரு மாணவரை ஆசிரியர் அடிக்க செய்த விவகாரத்தில் பதிலளிக்குமாறு, உத்தர பிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் ஆணையிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் குப்பாபூரில் திரபதி தியாகி என்ற பள்ளி ஆசிரியர், மாணவர் ஒருவரை சக மாணவரை வைத்து அடிக்க செய்தார். மேலும் அந்த மாணவனை மத ரீதியாக விமர்சித்தார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை, தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை, 4 வாரங்களுக்குள் அறிக்கையாக சமர்பிக்கும்படி, உத்தர பிரதேச தலைமைச் செயலருக்கும், டிஜிபிக்கும் ஆணையிட்டுள்ளது.
Next Story