வீடாத கனமழை.. பலமாக வீசிய காற்று..நடுக்கடலில் திடீரென கவிழ்ந்த படகு - "கடவுள் போல் வந்த கைகள்..."

x

கேரள மாநிலம் கொல்லம் கடல் பகுதியில் படகு கவிழ்ந்த நிலையில், அதில் இருந்த 3 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அங்கு சில நாட்களாக கனமழையும் கடல் பகுதியில் பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில் கொல்லம் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகு திடீரென கவிழ்ந்தது. அதில் இருந்த மூன்று மீனவர்கள் கடலில் தத்தளித்த நிலையில் அவ்வழியாக சென்ற

மற்றொரு படகு, மீனவர்களை பத்திரமாக மீட்டனர்.

ஆனால், பிடிக்கப்பட்ட மீன்கள், மீன் வலை, உபகரணங்கள் என பல லட்ச ரூபாய் மதிப்புடைய பொருள்கள் கடலில் மூழ்கின.


Next Story

மேலும் செய்திகள்