வேலைக்கு கொடுக்கப்படாத பணம்..நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு | Puducherry University | Court
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு, 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆடிட்டோரியம் கட்ட தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. கட்டுமான பணி முடிவடைந்த நிலையில், நிலுவை தொகையான சுமார் 4 லட்ச ரூபாயை, கட்டுமான நிறுவனத்திற்கு பல்கலைக்கழகம் தரவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக, கட்டுமான நிறுவனம் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், பல்கலைக்கழக ஆடிட்டோரிய கட்டடத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டனர். இதனையடுத்து, பல்கலைக்கழகத்திற்கு சென்ற அதிகாரிகள் புதிய ஆடிட்டோரிய கட்டடத்தை ஜப்தி செய்து, அதற்கான நோட்டீசை ஒட்டினர்....
Next Story