மொத்தமாக ஃபுல்ஸ்டாப்... மும்பை டூ சென்னை; டெல்லி டூ சென்னை - கவசத்தை கையில் எடுத்த மத்திய அரசு

x

நாடு முழுவதும் ரயில் விபத்துகளை தவிர்க்க, கவாச் 4.0 திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது. இதன் பின்னணியை பார்க்கலாம் விரிவாக...

ரயில் பயணம் என்றாலே ஓர் அச்சம் ஏற்படும் அளவிற்கு, பீதியை கிளப்பின கடந்த சில ஆண்டுகளாக அரங்கேறி வந்த ரயில் விபத்துகள்...

இதனால் பாதுகாப்பை மேம்படுத்த பல நடவடிக்கைகளை ரயில்வே துறை மேற்கொள்ளும் சூழலில், இந்திய ரயில்வே துறைக்கென சொந்த தானியங்கி ரயில் பாதுகாப்பு சாதனமாக கவாச் உருவாக்கப்பட்டது..

அபாய கரமான சூழல்களில் சிக்னல் கடந்து செல்வதையும், அதிக வேகத்தில் செல்வதையும் தவிர்க்க லோகோ பைலட்டுக்கு உதவுவது மட்டுமில்லாமல், அடர்ந்த மூடுபனி போன்ற மோசமான வானிலையின் போது ரயிலை இயக்கவும் உதவுகிறது.

குறிப்பாக இரண்டு ரயில்கள் எதிரெதிர் திசையில் வரும் போது, ரயில் எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள கவாச் கருவி, தானாக செயல்பட்டு 380 மீட்டருக்கு முன்பாகவே இரண்டு இஞ்சின்களையும் நிறுத்தி விடும் வல்லமை பெற்றது..

இந்த நிலையில் கவாச் பயன்பாட்டை அதிகரித்திடவும் , விபத்தில்லா ரயில்கள் இயக்கத்தை உறுதிப்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் கவாச் கட்டமைப்பை வலுப்படுத்திட பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது .


தென் மத்திய ரயில்வேயில் 1,465 ரூட் கிலோமீட்டர் தொலைவுக்கும் , 144 என்ஜின்களிலும் கவாச் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் டெல்லி - சென்னை, மும்பை - சென்னை பிரிவுகளில் சுமார் 3,300 ரூட் கிலோமீட்டர் தொலைவில், கவாச் திட்டத்திற்கான ஏலம் கோரப்பட்டு வருகிறது. மேலும் 10,000 என்ஜின்களில் கவாச் பொருத்துவதற்கான ஒப்புதல் ரயில்வே நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்காலத் திட்டமாக அனைத்து என்ஜின்களிலும் அடுத்த 4 ஆண்டுகளில் கவாச் பொருத்துதல் , RFID மூலம் குறைந்த தொகுதி பிரிவு கவாச் பாதுகாப்பு , ரயில் நிலையம் மற்றும் பணிமனைகளில் கவாச் அமைப்பை உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த திட்டத்திற்கு கவாச் 4.0 என பெயரிடப்பட்டுள்ளது


எனவே வரும் நாட்களில் மேம்படுத்தப்பட்ட கவச் அமைப்பு மூலமாக இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கண்டறிந்து அசாதாரண காலத்தில் ரயிலை நிறுத்துதல், ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதி ஏற்படும் உயிரிழப்புகள் பெரிதும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது ...


Next Story

மேலும் செய்திகள்