நடுங்க வைத்த திரிபுரா வெள்ளம், நிலச்சரிவு - முதல்வருக்கு உடனே போன் போட்ட அமித்ஷா
திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாகாவுடன் தொலைபேசியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். திரிபுராவில் கனமழை கொட்டித்தீர்க்கும் வேளையில், வெள்ளம், நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மீட்பு பணிக்காக படகுகள், ஹெலிகாப்டர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். நெருக்கடியான நேரத்தில் திரிபுராவுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் எனவும் தெரிவித்தார்.
Next Story