திரிபுரா மாநிலமே பேரதிர்ச்சியில்... 828 மாணவர்களுக்கு எய்ட்ஸ்..! - ஒற்றை ஊசி திகில் பின்னணி

x

திரிபுராவில் பள்ளி, கல்லூரியை சேர்ந்த 828 மாணவர்களுக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பது தெரியவந்திருக்கும் நிலையில் இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் சோதனைக்கு சென்ற போது அவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. போதைப் பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள் பலரும் ஒரே ஊசியை பயன்படுத்தி வந்தது இதற்கு காரணமாக சொல்லப்படும் நிலையில் இந்த செய்தியால் திரிபுராவே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. தொற்றுக்கு ஆளான 47 மாணவர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படும் நிலையில் மற்றவர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக அதிகாரிகள் தரப்ப​ி​ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்