பழங்குடியினருக்கு நாடாளுமன்ற தொகுதி வேண்டும் - எம்.பி. தம்பிதுரை ...

x

தொகுதி மறுவரையின்போது, தமிழகத்தில் பழங்குடியினருக்கு என்று ஒரு நாடாளுமன்ற தொகுதியை உருவாக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹிமாச்சல பிரதேசத்தில் ஹட்டி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வகைசெய்யும் அரசியல் சாசன பழங்குடியினர் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த மசோதா மீது, அதிமுக எம்பி தம்பிதுரை கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழகத்தில் பழங்குடியினத்தவர்களுக்கு இரண்டு சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே இருப்பதாக தெரிவித்த அவர், நாடாளுமன்ற தொகுதி ஒன்று கூட இல்லை எனக் குறிப்பிட்டார். தமிழகத்தில் உள்ள மீனவர்கள், படுகர் உள்ளிட்ட சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தொகுதி மறுவரையின்போது பழங்குடியினத்தவருக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் ஒரு நாடாளுமன்ற தொகுதியையாவது உருவாக்க வேண்டும் என்றும், அதன் மூலம் மீனவ சமூகத்தினர் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்


Next Story

மேலும் செய்திகள்