குஜராத் மருத்துவர்களுக்கு சென்னையில் பயிற்சி | Gujarat

x

குஜராத் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த 60 மருத்துவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.

அவசர சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ் மையம், இருதயவியல் சிகிச்சை பிரிவு என 10க்கும் மேற்பட்ட துறைகளில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவர்கள் தெரிந்துகொண்டனர். இதனை தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குஜராத் மருத்துவர்களுக்கு பயிற்சிகளையும் வழங்கினர். மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சைகள் வழங்கப்படுவதால் மற்ற மாநிலங்களை சேர்த்த மருத்துவர்கள் இங்கு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்