வேலை பார்த்து கொண்டிருந்த தூய்மை பணியாளருக்கு நேர்ந்த துயரம்-கண் இமைக்கும் நொடியில் நேர்ந்த விபரீதம்
புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த பணியாளர் வசந்தா மீது அதி வேகமாக வந்த இரு சக்கர வாகனம் மோதியது. அவரது ஒரு காலின் பாதம் தூண்டிக்கப்பட்டு, மற்றொரு காலின் பாதத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தை நேரில் பார்த்தவர்கள், இளைஞர்களை பிடித்த போது அவர்கள் போதையில் இருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், விபத்து குறித்து விசாரித்தனர். அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், விபத்திற்கு காரணமான இளைஞர்களை தாக்கினர். இதையடுத்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இளைஞர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
Next Story