சுங்கச்சாவடியில் அடாவடி - சர்..சர்ரென்று பாய்ந்த வாகனங்கள் - வெளியான பரபரப்பு வீடியோ

x

சுங்கச்சாவடியில் அடாவடி - சர்..சர்ரென்று பாய்ந்த வாகனங்கள் - வெளியான பரபரப்பு வீடியோ


உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல், பாஜகவினர் அத்துமீறி சென்ற சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. சுதந்திரதினத்தையொட்டி காரில் சென்ற பாஜகவின் இளைஞர் பிரிவினர், கான்பூரில் உள்ள ஒரு சுங்கச்சாவடியை கடக்க முயன்றுள்ளனர். அப்போது, காரின் முன் தடுப்பு அமைத்து கட்டணத்தை செலுத்த சுங்கச்சாவடி ஊழியர் வலியுறுத்தியுள்ளார். ஆனால், கட்டணத்தை செலுத்த மறுத்த பாஜக பிரமுகர், தடுப்புகளை அகற்றி வரிசையாக ஆதரவாளர்கள் காரை அனுப்பி வைத்ததுடன், ஊழியர்களை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் பாஜகவினரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்