வெளுத்து வாங்கிய கனமழை... பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - பறந்த எச்சரிக்கை
கேரளாவில் கடந்த ஒரு மாதத்திற்கு பின் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கிழக்கு வனப்பகுதியில் பெய்து வரும் கனமழை பெய்து வருகிறது. இதனால், மணியார் அணையின் 2 மதகுகளும், மூழியார் அணையின் ஒரு மதகும் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வரும் நீராலும், கனமழையாலும், கக்கட்டாறில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிவேகமாக பாய்ந்தோடும் வெள்ளப்பெருக்கை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள ஆபத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும், 7ஆம் தேதி வரை ஓரிரு இடைகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம் கோனி வட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.