மாணவிகள் பள்ளி கழிவறையை சுத்தம் செய்த விவகாரம்...தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் - கர்நாடகாவில் அதிர்ச்சி
சிக்கபல்லாபூர் மாவட்டம் குட்பகுண்டே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகள் இருவர் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ இணையத்தில் பரவி சர்ச்சையானது. இந்த வீடியோ கவனத்தில் வந்ததை அடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பள்ளி கழிவறைகளை மாணவர்களை வைத்து சுத்தம் செய்யக்கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ள நிலையில், உத்தரவை கடைப்பிடிக்கவில்லை எனக்கூறி பள்ளி தலைமை ஆசிரியை ரேணுகாவை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Next Story