இன்றைய தலைப்பு செய்திகள் (11-08-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines
மணிப்பூர் பற்றி எரிய வேண்டும் என பிரதமர் மோடி நினைப்பதாக, ராகுல் காந்தி இன்று குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே, டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அண்மைத் தகவல்களுடன் இணைகிறார்கள் செய்தியாளர்கள் ராஜா மற்றும் ரமேஷ்குமார்...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றதை அடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதனிடையே, இந்திய தண்டனைச் சட்டத்திற்கு மாற்றாக, அமித்ஷா அறிமுகம் செய்துள்ள புதிய மசோதா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசியல் விமர்சகர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம்... செய்தியாளர் ரமேஷ்குமார் வழங்கிய தகவல்கள் இவை...
ரமேஷ்குமார், மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றுள்ள நிலையில், இதில் எத்தனை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விவரங்களை சொல்லுங்க..
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றவர்கள் மீது, அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து விபத்தை நேரில் பார்த்தவர்களிடம் பேசினோம்... இதனிடையே, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.. செய்தியாளர் நவீன் வழங்கிய தகவல்கள் இவை...