காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-02-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-02-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
  • தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி செல்கிறார்... தமிழ்நாட்டிற்கு 17 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்...
  • மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த போதும் தமிழகத்திற்கு தி.மு.க. எதுவும் செய்யவில்லை என பல்லடம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி விமர்சனம்.... மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கு 3 மடங்கு நிதி வழங்கி இருப்பதாகவும் பேச்சு...
  • தமிழகத்திற்கு நல்லாட்சியை தந்தவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான் என பிரதமர் மோடி புகழாரம்... எம்.ஜி.ஆரை போலவே ஜெயலலிதாவும் மக்கள் மத்தியில் நிலைத்திருந்தார் எனவும் பேச்சு...
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்... தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டையில் வந்து தரிசித்தார்...
  • 10 ஆயிரத்து 417 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்... பல்வேறு துறைகள் சார்பில், புதிய திட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார்...
  • திமுக கூட்டணியில் இருந்து தமிழ்நாட்டில் 10 தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டம்... தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையிடம், தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவுறுத்தியதாக தகவல்...
  • வெறும் 3 முதல் 4 சதவீத வாக்கு உள்ள பா.ஜ.க.வில், நாம் சேர போகிறோம் என்று கூறினால், அதற்கு பதில் கூற வேண்டுமா...? don't care என விட்டுச் செல்லுங்கள் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்...
  • நாகை எம்.பி.யை காணவில்லை என திருவாரூர் சுற்று வட்டார பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு... உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் போலீசில் புகார்...
  • மகளிர் கிரிக்கெட் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், குஜராத்தை பந்தாடிய பெங்களூரு அணி... 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி...

Next Story

மேலும் செய்திகள்