காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-12-2023) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-12-2023) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- சென்னை வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களில் ஒருவர், 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு... மற்றொருவரின் உடலை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரம்...
- சென்னை வேளச்சேரி பள்ளத்துக்குள் விழுந்தவர்களின் உறவினர்கள் நள்ளிரவில் போராட்டம்...புயல் நேரத்தில் கட்டுமான பணிக்கு அனுமதி எப்படி கொடுத்தார்கள் எனவும் கேள்வி....
- சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. காஞ்சிபுரத்தில், ஸ்ரீபெரும்புதுர் மற்றும் குன்றத்தூர் தாலுகாக்களிலும். செங்கல்பட்டில் 6 தாலுகாக்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை....
- சென்னையில் இன்று ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும்.. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு...
- பள்ளிகள் திறப்பதற்கு முன், மின் கசிவு, பாடப் புத்தங்கள் சேதம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுரை... அனைத்து பள்ளிகளும் 11 ந் தேதி முதல் முழுமையாக செயல்படுவதை உறுதி செய்யுமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...
- அண்ணா பல்கலை கழகத்தால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு. பொறியியல் மாணவர்களுக்கு வருகிற 11ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்..
- சென்னை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி...வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு விரைவில், தமிழகம் வர இருப்பதாகவும் தகவல்...
Next Story