மக்கள்தொகையை குறைத்ததால் தமிழகத்துக்கு வந்த பேராபத்து? - நினைத்து பார்க்க முடியா தண்டனை?

x

மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்படுமா? என, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாடு, கேரளா ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் முன்னோடி மாநிலங்களாக திகழ்வதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுவாக 2026க்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2031ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பையே குறிக்கும் என்று தெரிவித்துள்ள ஜெயராம் ரமேஷ்,

ஆனால் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முழுவதும் சீர்குலைந்து,

2021-ல் திட்டமிடப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கூட இதுவரை நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் தொடங்கும் என தகவல் கிடைப்பதாக தெரிவித்துள்ள ஜெயராம் ரமேஷ், இது மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க பயன்படுத்தப்படுமா? என்று வினவியுள்ளார்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் வெற்றி அடைந்த மாநிலங்கள் அந்த வெற்றிக்காக தண்டிக்கப்பட கூடாது - அவ்வாறு நடைபெறாத வகையில் பொருத்தமான பார்முலாக்கள் வரையறுக்கப்பட வேண்டும் என்றும் ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்