தமிழ்நாடு புதிய சாதனை.. வெளியான சுவாரஸ்ய ரிப்போர்ட் | Tn Govt

x

தி.மு.க. ஆட்சியில் மூன்றாண்டுகளில் 28 ஆயிரத்து 824 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை படைத்துள்ளது.இதுதொடர்பான அறிக்கையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், 92 திட்டப் பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்து 198 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28 ஆயிரத்து 824 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டு, வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை, 37 ஆயிரத்து 720 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரத்து 23 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விற்பனை பத்திரம் மற்றும் ஆயிரத்து 733 மேம்படுத்தப்பட்ட மனைகளுக்கான விற்பனை பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின்கீழ் மூன்றாண்டுகளில், 1 லட்சத்து 68 ஆயிரத்து 495 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும்,சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யும் திட்டத்தின்கீழ், சுமார் ஆயிரத்து 608 கோடி மதிப்பீட்டில் 9 ஆயிரத்து 522 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நகர்ப்புற மக்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் 4 ஆயிரத்து 771 பேருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்