திடீரென திருப்பதியில் மொத்தமாக குவியும் பக்தர்கள்
திடீரென திருப்பதியில் மொத்தமாக குவியும் பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டோக்கன் இல்லாமல் நேரடி தரிசனம் செய்யும் பக்தர்கள், 36 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வார விடுமுறை மற்றும் பக்ரித் விடுமுறை என்பதால், திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. இதனால், எந்தவித டோக்கனுமின்றி நேரடியாக தரிசனத்திற்கு வருபவர்கள் 36 மணிநேரம் காத்திருந்து, சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 5 கிலோ மீட்டர் நீளத்திற்கும் மேலாக காத்திருக்கும் அவர்களுக்கு, தேவஸ்தானம் சார்பில் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
Next Story