நாட்டை அதிர்ச்சியாக்கிய திருப்பதி லட்டு...விரைவில்... தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு

x

திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்புகள் சேர்க்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள தோஷத்தை போக்க சிறப்பு பூஜை நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்து இருபதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.தொடர்ந்து திருப்பதி லட்டுகளில் உள்ள கலவைகள் குறித்து குஜராத் ஆய்வகத்தில் 5 கட்ட சோதனைகள் நடத்தப்பட்டது. இதில் லட்டுகளில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. விலங்கு கொழுப்பு கலந்த நெய்யில் லட்டு தயாரித்ததால் கோவிலுக்கு மிகப்பெரிய பாவமும், தோஷமும் ஏற்பட்டதாக அர்ச்சகர்கள் குற்றம்சாட்டினர்.இதனை தொடர்ந்து, கோவில் தோஷத்தை போக்க சம்ரோஷணம் எனப்படும் குடமுழுக்கு நடத்தி கோயிலை தூய்மைப்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விரைவில் குடமுழுக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்