ரூ.21 கோடி.. திருப்பதிக்கு நிதி கொடுத்த தொழிலதிபர் குடும்பம் | Tirupati Devasthanam | Donation
பிராண தான அறக்கட்டளைக்கு 21 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பஞ்சாப் தொழில் அதிபர்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திர குப்தா என்பவர் டிரிடெண்ட் குரூப் என்ற பெயரில் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இந்நிலையில் குடும்பத்துடன் திருப்பதி மலைக்கு வந்த அவர், தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரியை சந்தித்த அவர் தேவஸ்தானத்தின் பிராண தான அறக்கட்டளைக்கு 21 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார். மேலும் பிராண தான அறக்கட்டளைக்கு கிடைக்கும் நன்கொடை மூலம் திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சைன்ஸ் மருத்துவமனையில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு அவர்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப தேவஸ்தான நிர்வாகம் நிதி உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story