திருப்பதியில் வைத்த பேனரால் பரபரப்பு
திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்களில், இந்து அல்லாதோர்களுக்காக ஏராளமான இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பதிக்கு வரும் இந்து அல்லாதோர், ஆந்திர அறநிலையத்துறை சட்டம் 136 இன் கீழ், இறை நம்பிக்கை படிவத்தில் கட்டாயம் கையெழுத்திட வேண்டும் என்ற அறிவிப்புடன் திருப்பதி மலையில் திடீரென்று பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்பும் இதேபோல ஆங்காங்கே பொருத்தபட்டிருந்த நிலையில் அவை இடைக்காலத்தில் நீக்கப்பட்டன. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி மலைக்கு வர இருந்த தன்னுடைய பயணத்தை ரத்து செய்த நிலையில், இந்த பேனர்களை தேவஸ்தான நிர்வாகம் வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள் உட்பட பல்வேறு இடங்களில் அமைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story