நண்பருக்கு 2000 ரூபாய் கொடுத்து சிங்கப்பூர் சென்றவர் சொந்த ஊர் திரும்பியதும் கொலை - பகீர் பின்னணி

x

நண்பருக்கு 2000 ரூபாய் கொடுத்து சிங்கப்பூர் சென்றவர் சொந்த ஊர் திரும்பியதும் கொலை - பகீர் பின்னணி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்பக் கேட்டபோது ஏற்பட்ட வாய்த்தகராறில் இளைஞர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.

ஜோலார்பேட்டை அடுத்த பெரிய மூக்கனூர் பகுதியை சேர்ந்த கோடீஸ்வரன், அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் என்கிற மணிகண்டனுக்கு, சில வருடங்களுக்கு முன்பு 2 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய கோடீஷ்வரன், மணிகண்டனுக்கு தான் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்ததை தனது பெரியம்மா பையனான கிருபாகரனிடம் கூறியுள்ளார். இந்நிலையில், கிருபாகரன் மற்றும் மணிகண்டன் மற்றும் சிலர் மது அருந்தியபோது, தனது அண்ணனுக்கு தர வேண்டிய பணத்தை கிருபாகரன் கேட்டதாக தெரிகிறது. இதனால் தகராறு ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து அங்கு வந்த கோடீஸ்வரனுக்கும், மணிகண்டனுக்கும் இடையே தகராறு முற்றியது. இதையடுத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோடீஸ்வரனை மணிகண்டன் சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் கோடீஸ்வரன் உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு, மணிகண்டனுடன் இருந்த 3 பேரை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தப்பியோடிய மணிகண்டனை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்