திருப்பதியே குலுங்க வலம் வந்த மலையப்ப சாமி.. லம்பாடிகள் நடனம் ஆடி வந்த பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சாமி எழுந்தருளி வீதியுலா வந்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், சிம்ம வாகனத்தில் சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலீத்தார். மூன்றாவது நாளான நேற்று, முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி தயார்களுடன் எழுந்தருளி, பக்தர்களின் கோவிந்தா முழக்கத்திற்கு இடையே நான்கு மாடவீதியில் வலம் வந்தார். அப்போது, யானை, குதிரை, காளைகள் அணிவகுத்து வர, பக்தர்கள் மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடமணிந்தும், கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் லம்பாடிகள் நடனம் ஆடியபடி வீதிஉலாவில் பங்கேற்றனர்.
Next Story