திருப்பதி ஏழுமலையான் கோயிலில் - "வழக்கம் போல் இல்லை இந்த முறை"

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் குறைவாக இருந்ததால், பக்தர்கள் 2 மணிநேரத்தில் சாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி 3-வது சனிக்கிழமையான இன்று திருப்பதியில், கூட்டம் அலைமோதும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. எனவே, பக்தர்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் டோக்கன் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டிருந்தது. ஆனால், எதிர்ப்பார்த்ததைவிட இன்று கூட்டம் குறைவாக இருந்தால், பக்தர்கள் 2 மணிநேரத்தில் இலவச தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்