திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா...திரியை கொளுத்திய தருமபுரம் ஆதீனம் - புதுவை அரசுக்கு நெருக்கடி

x

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா...திரியை கொளுத்திய தருமபுரம் ஆதீனம் - புதுவை அரசுக்கு நெருக்கடி

தருமபுரம் ஆதீனம் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. கோவிலின் அனைத்து விழாக்களும் தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் நடத்தப்படும் நிலையில், தன்னிடம் ஆலோசனை நடத்திய பிறகே எந்த முடிவும் எடுக்க வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு தருமபுரம் ஆதீனம் மனு அனுப்பி இருந்தார்.

அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தருமபுரம் ஆதினம் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்