``இந்து இல்லை'' - மகளுக்கு வந்த சிக்கல்... மூச்சு விட முடியாமல் சரிந்ததால் ஷாக் - பரபரத்த திருமலை
ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், திருப்பதி லட்டு விவகாரத்தில் பரிகார விரதமிருந்து திருப்பதிக்கு நடைபயணம் மேற்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர அரசியலை உலுக்கிய திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்...ஆந்திராவை கடந்து தேசிய அரசியலிலும் எதிரொலித்தது...
ஒட்டுமொத்த அரசியல் களத்தை பரபரப்பாக்கிய திருப்பதி லட்டு விவகாரம், விஸ்வரூபம் எடுத்து வந்த சூழலில், திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பை சேர்த்து பெரிய பாவம் செய்து விட்டதாகவும், இதற்கு பரிகாரமாக 11 நாட்கள் விரதம் மேற்கொள்ளவுள்ளதாக கூறி விரதத்தை தொடங்கினார் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்...
சொன்னபடியே 11 நாட்கள் விரதம் மேற்கொண்ட அவர், தனது விரதத்தை முடித்துக் கொண்டு திருப்பதி கோவிலுக்கு அலிபிரி மலைப்பாதை வழியாக நடைபயணம் மேற்கொண்டார்.
3 ஆயிரத்து 500 படிகளை கடந்து சென்ற அவரை பலர் சூழ்ந்து கொண்டு வந்த சூழலில், பாதி வழியிலேயே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மூச்சு விடவே சிரமப்படும் நிலை ஏற்பட்டது...
உடல் முழுக்க வியர்வையால் நனைந்திருந்த அவர், வழியிலேயே ஆங்காங்கே அமர்ந்து பயணத்தை மேற்கொண்டார்.
அவருடன் வந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்த, கடும் முதுகு வலியிலும் பயணத்தை தொடர்ந்தார்...இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது..
மேலும் பவன் கல்யாணுக்கு ஆஸ்துமா மற்றும் முதுகு வலி பிரச்சனை இருப்பதாக குறிப்பிட்டு ரசிகர்கள் பலர், அவரது ஆரோக்கியம் குறித்து கவலை தெரிவித்து வந்தனர்..
இரவு முழுவதும் பல இன்னல்களை கடந்து அவர் தனது நடைபயணத்தை தொடர...அவருடன் கோவிந்தா கோஷம் எழுப்பியவாறு பயணத்தை மேற்கொண்டனர் உடனிருந்தவர்கள்