Telegram மூலம் கல்லூரி மாணவர்களுடன் மாடல் அழகி செய்த காரியம் - வெளியான திடுக்கிடும் தகவல்கள்
தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த மும்பையை சேர்ந்த மாடல் அழகியை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரு புட்டேனஹள்ளி காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர், தன்னை பெண் உட்பட 4 பேர் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் அளித்தார். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சரண் பிரகாஷ், யாசின், அப்துல் காதர் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி, டெலிகிராம் அப்ளிகேஷன் மூலம் தொழிலதிபர்கள், கல்லூரி மாணவர்களுக்கு வலை விரித்து, நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து, மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. பிடிபட்ட நபர்கள் அளித்த தகவலின்பேரில், மும்பையில் தங்கியிருந்த மாடல் அழகியை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில், ஏராளமான இளைஞர்களுடன் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை கண்டறிந்தனர். இதுவரை 16 பேரிடம் மிரட்டி பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.