"சனாதனத்தின் அடையாளம் இதுதான்..." பிரபல நடிகை திடீர் கருத்து

x

சனாதன கலாச்சாரத்தின் மிகப்பெரிய அடையாளமாக ராமர் கோயில் இருக்கும் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 600 ஆண்டுகளாக இந்து அமைப்பினர் மற்றும் முன்னோர்கள் ராமர் கோயில் அமைப்பதற்காக போராடியதாக கூறினார். தற்போது பிரதமர் மோடி மற்றும் உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முயற்சியில் அது சாத்தியமாகியுள்ளதாக தெரிவித்தார். வாட்டிகனில் கிறிஸ்துவர்களுக்கு இருக்கும் தேவாலயம் போன்று, இந்துக்களின் மிகப் பெரிய புனித தலமாக இது இருக்கும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்