இந்திய சினிமாவிலேயே முதல்முறையாக 99.99 தோல்வி - உலகை திரும்பவைத்த படம்...பாக்ஸ் ஆபிஸ் தான் பேரதிச்சி
இந்திய சினிமாவிலேயே முதல்முறையாக 99.99 தோல்வி - மொத்த உலகையும் திரும்பவைத்த ஒற்றை படம்...பாக்ஸ் ஆபிஸ் தான் பேரதிச்சி
சுமார் 45 கோடியில் எடுக்கப்பட்ட திரைப்படம், வெறும் 60 ஆயிரம் ரூபாயை மட்டுமே வசூல் செய்து கொடுத்ததால், படத்தை யூடியூபில் இலவசமாக வெளியிட்டு இப்போது திக்கு தெரியாத திசையில் நிற்கிறார் தயாரிப்பாளர்... யார் அவர்?... எந்த திரைப்படம் அது?.. பார்க்கலாம் விரிவாக..
நடிகர் அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத் தயாரிப்பாளரும், பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூர் நடித்து வெளியான படத்துக்குதான் இப்படி ஒரு நிலைமை...
பாலிவுட் இயக்குநரான அஜய் பெல் இயக்கத்தில், அர்ஜூன் கபூர் மற்றும் பூமி பெத்னேகர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் "தி லேடி கில்லர்"..
க்ரைம் தில்லர் படமான இத்திரைப்படம், சுமார் 45 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு ரிலீஸான நிலையில், வெறும் 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது...
கிட்டத்தட்ட 99.99 சதவீத தோல்வி படமாக கருதப்படும் இப்படத்தின் நிலையை பார்த்து ஓடிடி தளங்கள் வாங்க மறுத்து கை விரித்து விட்டார்களாம்...
இதனால், வேறு வழியின்றி யூடியூப் தளத்தில் படத்தை இலவசமாக வெளியிடும் நிலைக்கு படக்குழு தள்ளப்பட்டிருக்கிறார்கள்..
இந்நிலையில், யூடியூபில் தற்போது வரை 26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் படத்தை கண்டுகளித்திருக்கும் நிலையில், அதில் பெரும்பாலோனோர் படம் குறித்து கமெண்ட்டில் மோசமாக கருத்து பதிவிட்டு வருவது பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது...