"தெய்வம் சார் நீங்க" - மருத்துவமனையில் துடித்த உயிர்..! 3 கி.மீ. ஓடிச் சென்று காத்த டாக்டர்! - ஓர் நெகிழ்ச்சி பின்னணி

x

"தெய்வம் சார் நீங்க" - மருத்துவமனையில் துடித்த உயிர்..! 3 கி.மீ. ஓடிச் சென்று காத்த டாக்டர்! - ஓர் நெகிழ்ச்சி பின்னணி

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட மருத்துவர் 3 கிலோ மீட்டர் ஓடி சென்று அறுவை சிகிச்சை செய்து நோயாளியின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

பெங்களூர் சேர்ந்த கோவிந்த் நந்தகுமார் என்ற அறுவை சிகிச்சை மருத்துவர், சர்ஜாபூரிலுள்ள மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு அறுவை

சிகிச்சை செய்வதற்காக, கோரமங்களாவிலிருந்து சென்றுள்ளார். அப்போது கனமழையினால் சாலையில் தேங்கியிருந்த வெள்ள நீர் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து

நெரிசலில், கோவிந்த் நந்தகுமாரின் கார் சிக்கிக்கொண்டது. அதேநேரத்தில் குறிப்பிட்ட நோயாளிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருந்ததால்,

காரில் இருந்து இறங்கிய கோவிந்த் நந்தகுமார், 3 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மருத்துவமனைக்கு ஓடோடி சென்று நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து, அவரது

உயிரை காப்பாற்றியுள்ளார். இதுதொடர்பான அனுபவத்தை கோவிந்த் நந்தகுமார் சமூக வலைதளத்தில் பதிவிட, அப்பதிவு வேகமாக பரவி வருகிறது. மேலும் பலரும்

கோவிந்த் நந்தகுமாரை பாராட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்