உலகின் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள்...அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில் இந்தியாவும்..

x

உலகின் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள்...அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில் இந்தியாவும் - இந்தியா நினைத்தால்...முடியாததல்ல...


ஆம் சுயமாக விமானம் தாங்கி போர்க்கப்பல்களை தயாரிக்கும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, பிரான்ஸ் வரிசையில் இணைந்திருக்கிறது இந்தியா...

இந்த அனுபவம் இனிவரும் காலங்களில் கடற்படையை மேலும் வலுப்படுத்தும் வகையிலான உள்நாட்டு உபகரணங்கள் தயாரிப்பில் இந்திய தன்னிறைவு பெறும் என்பது சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்களின் கூற்றாகவும் இருக்கிறது.

உலக அளவில் 21 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் வலம்வந்தாலும், ஐ.என்.எஸ். விக்ராந்த் இந்திய பெருங் கடலில் வாலாட்டுவோருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கப்போகிறது என்கிறார்கள்.

உலகிலேயே அதிகப்பட்சமாக அமெரிக்காவிடம் 11 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன என தரவுகள் தெரிவிக் கின்றன. மிக சக்திவாய்ந்த கப்பலும் அமெரிக்காவிடமே உள்ளது.


அணுசக்தியில் இயங்கும் நகரும் கடற்படை தளமாக பார்க்கப்படும் Gerald R. Ford கப்பலில் 75-க்கும் அதிகமான விமானங்களை நிறுத்தலாம்..

இதற்கு அடுத்தப்படியாக சீனாவில் 3 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. சீனா உள்நாட்டிலே கட்டமைத்த Fugian கப்பலில் 40 விமானங்களை தரையிறக்கலாம் என சொல்லப்படுகிறது.


இந்தியாவிடம் 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. 2013 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டிலிருக்கும் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவில் 40 விமானங்களை நிறுத்தலாம். அந்த வரிசையில் புதிதாக களமிறங்கியிருக்கும் ஐ.என்.எஸ். விக்ராந்திலும் 40 விமானங்களை நிறுத்தலாம்.

பிரிட்டனிடம் Queen Elizabeth, Prince of Wales என 2 கப்பல்கள் உள்ளன. இரண்டு கப்பல்களிலும் 60-க்கும் அதிகமான விமானங்களை நிறுத்தலாம். இத்தாலியிடம் இருக்கும் Cavour, Giuseppe Garibaldi கப்பல்களிலும் 18 முதல் 30 வரையிலான விமானங்களை நிறுத்தலாம்.. ரஷ்யாவிடம்


Next Story

மேலும் செய்திகள்