நாட்டை பதறவைத்த உத்தரகண்ட் விபத்து...2 கி.மீ பாறைக்குள் தவிக்கும் 40 உயிர்கள்
- உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கித்தவிக்கும் 40 தொழிலாளர்களை மீட்கும் பணி 5வது நாளாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
- உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி, யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 40 தொழிலாளர்கள் சிக்கினர்.
- தொழிலாளர்களை மீட்கும் வகையில் அதிநவீன இயந்திரங்கள் மூலம் இடிபாடுகளை துளையிட்டு, மீட்கும் முயற்சியில் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளது.
- தொழிலாளர்களுக்கு தண்ணீர், ஆக்சிஜன், உணவு, மருந்துகள் உள்ளிட்டவை தொடர்ந்து அளிக்கப்படுவதுடன், குடும்பத்தார் பேசுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
- தற்போதைய நிலவரப்படி தொழிலாளர்கள் பத்திரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மருத்துவ குழு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
- இதனிடையே, மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் வி.கே.சிங், தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளதாகவும், தங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
Next Story