நாய் கடித்த‌தை மறைத்த மகன்...நாய் போல் குரைத்து கொண்டே 45ம் நாள் தந்தை மடியில் பிரிந்த உயிர்

x

நாய் கடித்த‌தை மறைத்த மகன்...நாய் போல் குரைத்து கொண்டே 45ம் நாள் தந்தை மடியில் பிரிந்த உயிர் - ரணமாக்கும் காட்சிகள்

உத்தரப்பிரதேசத்தில் நாய் கடியால் ரேபிஸ் நோய் பரவி 14 வயது சிறுவன் உயிரிழந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காஷியாபாத்தில், ஷவாஸ் என்ற 14 வயது சிறுவனுக்கு 45 நாட்களுக்கு முன்பு நாய் கடித்துள்ளது. அதைப்பற்றி யாரிடமும் செல்லாமலும், மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலும் சிறுவன் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து சிறுவனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தண்ணீரைக் கண்டால் பயப்படுவதும், சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல், நாய் போன்று குரைத்துக்கொண்டும் இருந்த‌தால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விசாரித்த போது நாய் கடித்த‌து தெரிய வந்த‌து. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, தந்தையின் மடியிலேயே உயிரிழந்துள்ளார். பரிசோதனையில் அந்த சிறுவனுக்கு ரேபிஸ் நோய் தாக்கியிருப்பதும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத‌தால் நோய் பரவி உயிரிழந்த‌தும் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்