மீண்டும் தலை தூக்கும் அசுரன் - கர்ப்பிணிகளை நெருங்கும் கொடூரம்? - பீதியில் கர்நாடகா மக்கள்
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 68 இடங்களில், கொசுக்களின் உடலில் ஜிகா வைரஸ் உள்ளதா என பரிசோதிக்கப்பட்டது. இதில், சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் ஆறு இடங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மாதிரி எடுக்கப்பட்ட பகுதிகளில், வைரஸ் பரவுவதைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 30 கர்ப்பிணிகள் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் கூடிய 7 பேரின் மாதிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் 5 ஆயிரம் பேரை உண்ணிப்பாக கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story