அள்ள.. அள்ள வரும் பணம்.. விழாவுக்கு ஆயத்தமாகும் கடவுள் தேசம் - அதிர்ச்சியின் உச்சியில் அதிகாரிகள்

x

கேரளாவில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சோதனைச் சாவடிகளில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை செய்தனர்.

கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். பல இடங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், சோதனைச் சாவடிகளில் லஞ்சம் வாங்கப்படுகிறதா? என்பதை கண்டறிய, லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் கலால் துறைக்குச் சொந்தமான 39 சோதனைச் சாவடிகள், கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் உள்ள 12 சோதனைச் சாவடிகள், மோட்டார் வாகனத் துறையின் கீழ் உள்ள 29 சோதனைச் சாவடிகள் என 70 சோதனைச் சாவடிகளில் அதிரடி சோதனை நடைபெற்றது. பல இடங்களில் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்