நாட்டை அதிர வைத்த மணிப்பூர் விவகாரம்...அதிரடியாக களம் இறங்கிய 21 எம்.பி.க்க​ள்

x

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், அரசுக்கு எதிராக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து உடனடியாக விவாதிக்கவும் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் முடங்கியது. இந்நிலையில், மணிப்பூரில் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் கள நிலவரத்தை நேரில் ஆய்வு செய்ய, இந்தியா கூட்டணி சார்பில் மணிப்பூர் செல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி, காங்கிரஸ், தி.மு.க., வி.சி.க, திரிணாமூல் காங்கிரஸ், ஆர்.ஜே.டி உள்ளிட்ட 16 கட்சிகளைச் சேர்ந்த 21 எம்.பி.க்க​ள் அடங்கிய குழுவினர் மணிப்பூரில் இன்றும், நாளையும் நேரில் ஆய்வு செய்கின்றனர். காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தி.மு.க எம்.பி. கனிமொழி, வி.சி.க எம்.பி. திருமாவளவன் உள்ளிட்டோர் செல்கின்றனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்து, கள நிலவரம் குறித்து அறிக்கை அளிக்க உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்