டிமிக்கி கொடுத்த சிறுத்தை..! வனத்துறை போட்ட பிளான்
கர்நாடக மாநிலம் பெங்களூரூவில், சிறுத்தை நடமாட்டம் நடந்த பகுதியில் வனத்துறை அதிகாரிகள் தீவிர தேர்தல் வேட்டை நடத்தி, சிறுத்தையை பிடிக்க 4 கூண்டுகளை அமைத்து தேடி வருகின்றனர்.
ஒயிட்பீல்ட் பகுதியில் உள்ள
பழைய கட்டிடம் ஒன்றில் சிறுத்தையின் கால் தடங்கள் இருந்ததால், கட்டிடத்திற்குள் பதுங்கி இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் சந்தேகத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்க கூறிவிட்டு நான்கு இடங்களில் கூண்டுகளை வனதுறையினர் அமைத்துள்ளனர். மேலும் சிறுத்தையை பிடிக்க வலைகள் மற்றும் மயக்க ஊசி ஆகியவற்றுடன் கால்நடை மருத்துவரும் சம்பவ இடத்திற்கு வந்து முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story