ஹாரன் அடித்த இஸ்ரோ விஞ்ஞானி... காலால் எட்டி உதைத்த இளைஞர் - வெளியான வைரல் வீடியோ

x

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், இஸ்ரோ விஞ்ஞானியின் காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இஸ்ரோவில் பணியாற்றும் ஆஷிஷ் லம்பா, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில், முன்னாள் சென்ற இளைஞரை முந்திச் செல்ல, ஆஷிஷ் லம்பா ஹாரன் அடித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், காரை வழிமறித்து, ஆஷிஷ் லம்பாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், காரை 2 முறை எட்டி உதைத்துவிட்டு அங்கிருந்து சென்றார். காரின் டேஷ்கேமில் பதிவான வீடியோ காட்சிகளை ஆஷிஷ் லம்பா, சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து, அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்