ஆந்திர அரசியலையே உலுக்கிய சம்பவம்... ```அசைவ' நெய் தமிழக நிறுவனத்தில் தயாராகலையாம்..''

x

ஆந்திர அரசியலையே உலுக்கிய சம்பவம்... ```அசைவ' நெய் தமிழக நிறுவனத்தில் தயாராகலையாம்..'' எதிர்பாரா திருப்பம்

#Tirupati #TirupatiLaddu #Tirumala #LadduGhee

விலங்குகள் கொழுப்பு கலந்த நெய் கொண்டு திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய உணவு பாதுகாப்புத் துறை நடத்திய ஆய்வு குறித்து பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்திய நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்து இருந்தாக வெளியான தகவல் ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக, திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் மீது ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே கடந்த மாதம் மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அதில் சம்மந்தப்பட்ட 4 கன்டெய்னர் கலப்பட நெய் தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவி டெய்ரி கம்பெனியில் இருந்து ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் வாங்கியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியதுடன், போலீஸ் நடவடிக்கை எடுக்கவும் தயாராகியுள்ளனர். இதே நேரத்தில் ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமத்தை ரத்து செய்ய மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்