மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம்.. அரசு மருத்துவமனையில் சோதனை

x

மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம்.. அரசு மருத்துவமனையில் சோதனை

காரைக்காலில் பள்ளி மாணவர் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக சுகாதாரத்துறை உத்தரவின் பேரில் மருத்துவக் குழுவினர் அரசு மருத்துவமனையில் ஆய்வு

மேற்கொண்டனர்.

படிப்பில் போட்டி காரணமாக காரைக்காலை சேர்ந்த பாலமணிகண்டன் என்ற சிறுவன் சக மாணவியின் தாயால் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டான். இந்த

சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு உத்தரவின்பேரில் குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முரளி தலைமையில் மருத்துவ

குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சென்று சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர்கள், செவிலியர் மற்றும் ஊழியர்களிடம்

விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணை அறிக்கை நாளைக்குள் புதுச்சேரி அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.



Next Story

மேலும் செய்திகள்