முதல்வருக்கு பாசமாக உணவு பரிமாறிய ஆளுநர்
தேநீர் விருந்து அரசியல் செய்வதற்கான விழாக்கள் கிடையாது என்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசைசெளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சுதந்திரதினவிழாவையொட்டி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேனீர் விருந்தளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட அமைச்சர்கள், பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை, இது போன்ற விழாக்கள் நடத்துவதற்கு உள்நோக்கமோ கிடையாது என்றார்.
அழைத்தவர்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டால், மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் கூறினார்.
Next Story