நாட்டிலேயே முதல் முறை சாதி வாரி கணக்கெடுப்பு... இட ஒதுக்கீட்டை அதிரடியாக உயர்த்திய பீகார்
பீகார் சாதி வாரி கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்ட
முதல்வர் நிதீஷ் குமார், இட ஒதுக்கீட்டை உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியிருக்கிறார்.
அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
நாட்டிலேயே முதல் முறையாக, பீகாரில் சாதி வாரி
கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் பீகார்
சட்டப் பேரவையில், செவ்வாய் அன்று சமர்பிக்கப்பட்டது.
பீகாரில் 34 சதவீத மக்கள் தொகையினர், தினமும் 200
ரூபாய்க்கும் குறைவான வருவாயுடன், வறுமையில் உள்ளதாக
அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரின் விகிதம் 19.65
சதவீதமாக உள்ளது. இவர்களில் 42.93 சதவீதத்தினர்
வறுமையில் உள்ளனர்.
பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினரின் விகிதம் 63
சதவீதமாகவும், பொதுப் பிரிவினரின் விகிதம் 15.52
சதவீதமாகவும் உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
பிற்பட்ட வகுப்பினரில் 33.16 சதவீதத்தினரும், மிகவும்
பிற்பட்டவகுப்பினரில் 33.58 சதவீதத்தினரும் வறுமையில்
உள்ளனர். உயர் சாதியினரில் 25 சதவீதத்தினர் வறுமையில்
உள்ளனர்.
பிற்பட்ட, மிகவும் பிறபட்ட மற்றும் பட்டியல் பிரிவினருக்கான
மொத்த இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தப் போவதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார்
அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு பீகாரில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பீகாரில் மொத்த இட ஒதுக்கீடு 75 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது.
இதற்கான சட்டத் திருத்த மசோதா நவம்பர் 9 அன்று சட்ட
மன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீடு 16 சதவீதத்தில்
இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது.
பட்டியல் இனப் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு ஒரு
சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.
பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 8 சதவீதத்தில்
இருந்து 12 சதவீதமாகவும்,