திடீரென தீ பிடித்து எரிந்த மின்சார பேருந்து... நொடியில் உயிர் தப்பிய பயணிகள்.. பரபரப்பு காட்சிகள்..!
மும்பையில் மின்சார பேருந்து நடு சாலையில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நவி மும்பையில் உள்ள அய்ரோலி செக்டார்-8 என்ற பகுதியில் மின்சார பேருந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென தீ பிடித்ததால், பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடினர். பேருந்து முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால், சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன. கடும் போக்குவரத்து நெரிசலால் தீயணைப்பு வாகனம் வருவதற்கும் வழி இல்லாத சூழல் காணப்பட்டது. அதன்பின்னர், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தி அனுப்பி, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்
Next Story