"அடி பம்ப்-ல பால் வருதா..? பாற்கடலுக்கே ஸ்ட்ரெயிட் கனெக்ஷன்..!" - பிடித்து குடித்த மக்களின் நிலை..?
உத்தரப்பிரதேசத்தில் அடி பம்ப்பை இயக்கியபோது, வெள்ளை நிறத்தில் நீர் வெளியேறிய நிலையில், பால் என நினைத்து பொதுமக்கள் முண்யடித்துக்கொண்டு பிடித்துச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் அடி பம்ப் உள்ளது. இந்நிலையில், இந்த பம்ப்பை இயக்கியபோது, அதிலிருந்து வெள்ளை நிறத்தில் நீர் வெளியேறியதால் பால் கொட்டுவதாக நினைத்த அப்பகுதி மக்கள், அதனை சேகரிக்க முண்டியடித்துக் கொண்டு சென்றனர். பாலித்தீன் கவர்களிலும் பாட்டில்களிலும் அதனை சேகரித்து வீடுகளுக்குக் கொண்டு சென்றனர். இதனிடையே, அடி பம்ப்பில் இருந்து கொட்டியது பால் அல்ல என்றும், அடி பம்பு சேதமடைந்ததால் மாசடைந்த நீர் அடி பம்ப்போடு கலந்து வெள்ளை நிறத்தில் நீர் வெளியேறியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பால் என நினைத்து தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்று பருகிய மக்களின் உடல்நலம் குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.