போலீசைப் பார்த்து பயந்து அழுத சிறுவன்... - 'குட்டி ஸ்டோரி' சொல்லி சமாதானம் செய்த போலீசார்

x

போலீசைப் பார்த்து பயந்து அழுத சிறுவன்... - 'குட்டி ஸ்டோரி' சொல்லி சமாதானம் செய்த போலீசார்

காவலர்களைப் பார்த்து பயந்து அழுத சிறுவனுக்கு போலீஸ் மீதான பயத்தை கேரள எஸ்.ஐ போக்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிராப்பள்ளி விழிக்கித்தோடு செருவல்லியைச் சேர்ந்த அனில்குமார் - நயனா தம்பதியின் 3 வயது மகன் தேவ்ஜித்...

இவர்களின் பக்கத்து வீட்டில் ஒரு வழக்கு விசாரணைக்காக போலீசார் வந்து சென்றுள்ளனர்...

அவர்களைப் பார்த்ததில் இருந்து அழத் துவங்கிய தேவ்ஜித், காவலர்கள் சென்ற பிறகும் பயத்தில் அழுது கொண்டே இருந்துள்ளான்...

இதையறிந்த எஸ்.ஐ அருண், சிறுவனை காவல் நிலையம் வரவழைத்து, தூக்கி மடியில் அமர வைத்து, சுமார் 1 மணி நேரம் கதை சொல்லி விளையாட்டு காட்டி... சிறுவனுக்குப் பிடித்த இனிப்புகள் வழங்கி மகிழ்வித்து தேவ்ஜித்துக்கு போலீஸ் மீதான பயத்தைப் போக்கியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்